search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து வேறுபாடு"

    தேர்தல் ஆணையர்களுக்குள் கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதால் அசோக் லவாசா தெரிவித்த கருத்து சகஜமானதுதான் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில்  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்  அசோக் லவாசா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரியவந்தது.

    எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் கடந்த 4-ம் தேதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.



    அதில் ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை.

    அமித் ஷா மற்றும் பிரதமருக்கு எதிரான 11 நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு எனக்கு ஏற்புடையதல்ல. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி, எனது எதிர்ப்புகளும் பதிவு செய்யப்படாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை’’ என்று அசோக் லவாசா குறிப்பிட்டிருந்தார்.

    கடிதத்தின் நகலுடன் இந்த தகவல் ஊடகங்களில் வெளியான பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் 13 விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்கு ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று நடத்தை விதிமீறல் தொடர்பானது.

    தேர்தல் கமிஷனில் ஆணையாளர்களாக பதவி வகிக்கும் மூன்று பேருமே மற்றவர்களின் ‘குளோனிங்’ (நகல்) ஆக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்னரும் பல முறை சில விவகாரங்களில் ஆணையாளர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. இதுபோன்ற முரண்பாடுகள் இருக்கக்கூடியது, இருக்க வேண்டியதும்கூட. ஆனால், அவை அனைத்துமே தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரக்கோணத்தில் 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தக்கோலம்:

    அரக்கோணம் ஜோதி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை விட்டு பிரிந்து வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை கண் விழித்த சித்ராவின் மகள்கள் தாய் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சித்ரா எதற்காக தற்கொலை செய்தார் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் கடந்த 2 வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி மீனாம்மாள்(வயது38). தர்மராஜ் டெய்லராக உள்ளார்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 வருடமாக மீனாம்மாள் ஈரோடு, அல்-அமீன் நகர், தோட்டம்பட்டியில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வந்தார்.

    கணவன்-மனைவி பிரச்சனை குறித்து இருவீட்டாரும் சமரசம் செய்ய முயன்றனர். எனினும் சுமூக முடிவு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனாம்மாள் சில நாட்களாகவே மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மீனாம்மாள் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வி‌ஷ மாத்திரையை தின்று விட்டார். இதில் அவர் மயங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மீனாம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மீனாம்மான் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டிடிவி தினகரனுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #MLAdisqualifiedcase #ThangaTamilSelvan
    சென்னை:

    18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாம் நீதிபதி நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரும் தினகரனின் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் அவரது சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறப்போவதாகவும், மேலும் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என வலியுறுத்தினார்.

    இதையடுத்து டிடிவி தினகரனின் உத்தரவு இன்றி இவர் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், அவரது விருப்பப்படி செய்துகொள்ளும்படி டிடிவி தெரிவித்ததாக கூறியிருந்தார்.

    இதனால், டிடிவி தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட சில ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அதனால் தான் இதுபோன்ற கருத்துக்களை தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், 18 எம்.எல்.ஏக்களும் டிடிவி தினகரனுடன் ஒற்றுமையாக இருப்பதாகவும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்ததால் மட்டுமே வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுபோன்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம் எனவும், நாங்கள் மிகவும் வெளிப்படையாகவே இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார். #MLAdisqualifiedcase #ThangaTamilSelvan
    ×